சியோல் சர்வதேச நாடுகள் எச்சரிக்கைகளை மீறி வடகொரியா பெரும் சேதங்களை ஏற்படுத்தும் ஸ்கட் ரக ஏவுகணைகளை சோதித்துள்ளது. அண்டை நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. இந்தநிலையில் ஸ்கட் ரக ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து பார்த்ததை ஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த வகையான ஏவுகணைகளை மாற்றியமைக்கும் பஞ்சத்தில் 1000 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்கைக்கூட தாக்கி அழிக்க முடியும். தற்போது இதனை 450 கிலோ மீட்டர் தூரம் இயக்கி பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜப்பான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ள தடையை மீறிய செயல் என விமர்சனம் செய்துள்ளது. வடெகாரியாவின் இந்த ஏவுகணை சோதனை விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பிர நாடுகளுடன் இணைந்து வடகொரியாவை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்