img
img

கனமழையால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250 -ஆக அதிகரிப்பு
திங்கள் 29 மே 2017 15:11:48

img

கொழும்பு இலங்கையில் மழை மற்றும் பெருவெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 250-ஆக அதிகரித்துள்ளது. காலி, களுத்துறை, கேகாலை, ரத்தினபுரி மாவட்டங்கள் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் கடந்த சில தினங்களாக மழை வெலுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளி யேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு படையினர் நிவாரண பணிகளில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்படுள்ளது. வெள்ளத்தால் அடித்து செல் லப்பட்டு மண்ணுக்குள் புதைந்தும் ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. 2013-ம் ஆண்டுக்கு பின்னர் பெய்துள்ள மிக கனமழை என்று இலங்கை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை சற்று தணிந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் முடிக்கி விடப்பட்டுள்ளன. இதனிடையே 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்று புகார்கள் குவிவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img