அமெரிக்காவில் புற்றுநோயால் மரணப்படுக்கையில் இருக்கும் காதலியை காதலன் திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தை சேர்ந்தவர் ரொண்டா பெவன்ஸ் (28), இவர் தனது சிறுவயது நண்பரான மாட் மகெர் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் ரொண்டாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன்பின் அது புற்றுநோய் என தெரியவந்தது. நோய் கடுமையடைந்து ரொண்டா கடந்த வாரம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மேலும் ரொண்டா சில நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து அவரின் கடைசி ஆசையை தெரிந்து கொண்ட அவரின் தோழி, காதலனுடன் திருமணம் செய்து வைத் துள்ளார். ரொண்டாவை அவரின் வீட்டுக்கு அழைத்து சென்று, மத போதகர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் அவர் படுத்திருந்த நிலையில் அவருக்கும் மகெருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்ததும் ரொண்டாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது. ரொண்டா இன்னும் எத்தனை நாள் உயிரோடிருப்பார் என்று தெரியாது. ஆனால், அவளுக்கு அழகான விழிகள் உள்ளன என்று கண்ணீருடன் மாட் மகெர் கூறியுள்ளார்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்