img
img

எனது முதல் பட்ஜெட் ‘புதிய அமெரிக்காவுக்கான அடித்தளமாக அமையும்’
ஞாயிறு 28 மே 2017 14:54:45

img

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டெனால்டு டிரம்ப், வாரந்தோறும் வானொலி மற்றும் இணையதளம் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்தவகையில் அவரது சமீபத்திய உரையில் தனது அரசின் முதல் பட்ஜெட் குறித்து பேசினார். இந்த பட்ஜெட் புதிய அமெரிக்காவுக்கான அடித்தளமாக அமையும் என அப்போது அவர் உறுதியளித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘அமெரிக்காவின் உன்னதத்தை எட்டவும், நாட்டின் எதிர்கால பொருளாதார வளத்துக்காகவும், எனது நிர்வாகம் புதிய அடித்தளத்தை அமைத்து வருகிறது. அந்தவகையில் எனது நிர்வாகம் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட், அமெரிக்க தொழிலாளர்களுக்கு லட்சக் கணக்கான வேலைவாய்ப்புகளுக்கான பாதையை உருவாக்குவதுடன், பொருளாதார தேக்க நிலையையும் மாற்றும்’ என்றார். தனது பட்ஜெட்டில் சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவ திட்டங்களுக்கு நிதி குறைக்கப்படாது என்று கூறிய டிரம்ப், நமது நோக்கங்களை நிறை வேற்றுவதற்காக மக்கள் வீடுகளில் மேற்கொள்வது போல முன்னுரிமைகளை அமைத்தல், தேவையற்றதை குறைத்தல், புதிய வாய்ப்புகளை வளர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். கவனமும், பாதுகாப்பும் இல்லாமல் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகாது என்றும் டிரம்ப் கூறினார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img