பிலிப்பைன்ஸ் இராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முடியும் என்று அந்நாட்டின் அதிபர் ரோட்ரிகோ ட்யூட்டரெட்டின் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் சர்ச்சைப் பேச்சுகளுக்கு குறைவில்லாதவர். அடிக்கடி அவரின் பேச்சு ஒரு சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வழக்கம். அமெரிக்க அதிபர் ஒபாமாவை கடுமையாக திட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன் பின் அதற்கு மன்னிப்பும் கோரினார். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் இராணுவத்தினர் மத்தியில் பேசிய அவர், தீவிரவாதிகளை எதிர்ப்பதில் இராணுவத்தினருக்கு தாம் பக்கபலமாக இருப்பதாகவும், எவரையும் கைது செய் யவும், எந்த வீட்டையும் சோதனையிடவும் இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் உண்டு என்று தெரிவித்தார். இராணுவ வீரர்களின் திறனை மேம்படுத்திக் கூற முற்பட்ட அவர் எங்கள் இராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் அளவிற்கு பலம் பொருந்தியவர் என சொல்லிவிட்டார். நாடு முழுவதும் வௌியான இந்த உரை பர் மத்தியில் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் கிளப்பியது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்