இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவு காரணமாக உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நேற்று அதிகாலை முதல் 24 மணிநேர காலப்பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 230 பேர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும், 53000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இயற்கைப் பேரிடர் மத்திய நிலையம் தெரிவித் துள்ளது. இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால், அங்கிருந்து வரும் வெள்ளம் காரணமாக களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாய கட்டத்தில் உள்ளதா அஞ்சப்படுகிறது. ஏழு மாவட்டங்களில் ஆபத்து எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தை விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது. பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று நிவாரணம் வழங்குவது பிரதான பணியாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள், முப்படையினர், போலிஸார் இணைந்து செயற்படுகிறார்கள். இரத்தினபுரி, காலி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் 450 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ள தாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்