இலங்கையில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்வகையில் நிவாரணப் பொருட்களுடன் இரண்டு கடற்படைக் கப்பல்களில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 230 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாக தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்தியா உடனடியாக உதவ முன்வந்தது. இந்தியக் கடற்படையின் கப்பல் ஒன்று உதவிப் பொருட்களுடன் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்றும் மற்றொரு கப்பல், நாளை மறுநாள் கொழும்பு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்