லண்டனர்: இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கடந்த திங்கட்கிழமை நடந்த இசை நிகழ்ச்சியில் மனித குண்டு வெடித்ததில் 22 பேர் பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதி சல்மான் அபேதி(22) என்ற இளைஞர் ஈடுபட்டது தெரியவந்தது. இவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப்படும் சிலர் மான்செஸ்டர் நகரில் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடுகளில் மான்செஸ்டர் போலீசார் சோதனை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் ஒரு பெண்ணும் கைது செய்ய்பட்டு சில மணி நேர விசாரணைக்குப்பின் விடுவிக்கப்பட்டார். சல்மானின் தந்தை ரமதான் அபேதி, சகோதரர் ஹாசிம் ஆகியோர் லிபியாவில் கைது செய்யப்பட்டனர். ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினராக சல்மானும், நானும் இருந்தோம் என ஹாசிம் ஒப்புக் கொண்டார். மான்செஸ்டர் நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் அல் லது மிகப்பெரிய தாக்குதலை சல்மான் நடத்தப்போவதாக தான் ஏற்கனவே அறிந்திருந்ததாகவும் ஹாசிம் கூறியுள்ளான். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மான்செஸ்டர் நகரின் டிராபோர்டு பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே வெடிகுண்டு போன்ற மர்மப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு ராணுவத்தின் வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்