கொழும்பு இலங்கையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழை , வெள்ளப்பெருக்கு, மண்சரிவுகளால் இலங்கையின் தென்பகுதி முற்றிலும் பாதிக்கப்பட் டுள்ளது. அங்கு நிலவி வரும் மிக மோசமான காலநிலை காரணமாக இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலநூற்றுக்கணக் கானோர் காணாமல் போயுள்ளதாகவும் பரபரப்பான செய்திகள் வெளியாகின. கடுமையான மழையும், அதனால் ஏற்பட்ட பெரும் வள்ளப்பெருக்கும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் மண்சரிவை ஏற்படுத்தியதால் பலர் மண் ணுள் புதைந்துண்டு மரணித்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. அதேவேளை வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பதுடன் சொத்துக்களும் அழிந்து நாசமாயின. மக்கள் பாதுக்காப்புத் தேடி வெளியேறும் அதேவேளை பலர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதனால் அரசாங்கத்தால் மீட்புப் பணிகள் திடர்கின்றன. களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, மாத்தளை,ஹம்பந்தோட்ட ஆகிய மாவட்டங்களைத் தாக்கிய இந்த இயற்கைச் சீற்றத்தால் குறைந்தது 5 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.மீட்புப் பணிக்காக சென்றிருந்த ஹெலிகாப்டர் காற்றின் வோத்தில் சிக்கி மாட்டிக்கொண்டதால் அதில் பயணித்த ஒருவர் தவறி வெள்ளத்தில் விழுந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும் காலி மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் சிக்கி அங்கு பலர் உயிரிழந்துதோடு அதிக மானோர் காயமடைந்தனர். குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி பெரும் அவலங்களைச் சந்தித்து வருவதாகவும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகின. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எனவே ஹெலிக்காபடர்கள் மூலம் மக்களைக் காப்பாற்றவும், மருத்துவ உதவிகள் செய்யவும் என அரசு முப்படைகளையும் அவசர அழைப்பு விடுத்துள்ளது. சுனாமிக்குப் பின்னர் இலங்கையில் நிகழ்ந்த மிகப்பெரும் இயற்கை அழிவாகவும், உயிரிழப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்