ட்ரம்ப் அதிபரான பிறகு, ஜெர்மனியுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்துவருகிறார். குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் ட்ரம்ப், ஜெர்மனியின் பிரத மர் ஏஞ்சலா மெர்கலன் இருவரும் சந்தித்தனர். அப்போது, ஏஞ்சலா, ட்ரம்புடன் கைக்குலுக்க வர, ட்ரம்ப் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஏஞ்சலாவின் முகத்தைக்கூட ட்ரம்ப் பார்க்கவில்லை. இதனால், பயங்கர நோஸ்கட்டுடன் ஏஞ்சலா திரும்பினார். இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் ட்ரம்ப் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ட்ரம்ப்பின் பேச்சால் ஜெர்மனி மேலும் சூடாகியுள்ளது. முக்கியமாக, "ஜெர்மனியர்கள் கெட்டவர்கள்... மிகவும் கெட்டவர்கள். அமெரிக்காவில் அவர்கள், மில்லியன் கணக்கில் கார்களை விற் பனைசெய்துள்ளனர். ஆனால், அவற்றை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்" என்று கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கருத்தால், உலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம்போல, ட்ரம்ப்புக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. ஒபாமா இருந்தவரை ஜெர்மனியுடன் அவர் நல்லுறவைக் கடைபிடித்துவந்தார். இதற்கிடையே, ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை, இரு நாட்டின் உறவில் மேலும் விரிசலை ஏற் படுத்தும் என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்