கடந்த மாதம் 9 ஆம் தேதி எகிப்தில் உள்ள காப்டிக் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலி யாகினர். ஐஎஸ் தீவிரவாத இயக்கம், இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இதையடுத்து எகிப்தில் மூன்று மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனம் அறி விக்கப்பட்டது. இதனிடையே இன்று மீண்டும் எகிப்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். செயின்ட் சாமுவேல் தேவாலயத்துக்குப் பயணம் மேற்கொண்ட காப் டிக் கிறிஸ்தவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 23 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற் பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. முகமது மோர்சியின் பதவி பறிக்கப்பட்ட பின்பு எகிப்து அதிகளவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகிவருகிறது. எகிப்தில் இருக்கும் கிறிஸ்தவர்களைக் குறி வைத்து இத்தாக்குதல் கள் நிகழ்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்