பிரேசிலியா: பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே அவர் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத் தினர். ஆனால் அவர் பதவி விலக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கொதித்தெழுந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தலைநகர் பிரேசிலியாவில் மாபெரும் பேரணி நடந்தது. அதில் 35 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வேளாண் அமைச்சக அலுவலகத்தில் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். அலுவலகத்துக்கும் தீவைத்தனர். அதே போன்று மற்ற அமைச்சக அலுவலகங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் மீது கற்களும் வீசப்பட்டன. இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. எனவே கூட்டத்தை கலைக்க போலீசார் ரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்