லண்டன் திங்களன்று அமெரிக்க பாப் பாடகர் அரியானே கிராண்டேவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் இறந்தனர். காயமடைந்தோர் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. முதலில் 59 இருந்த இந்த எண்ணிக்கை தற்போது இரட்டிப்பாகியுள்ளது. இவர்களில் 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்; இதில் 20 பேர் நிலை கவலைக்கிடமானது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த 2005 ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்குப் பிறகு நடந்த பெரிய குண்டுவெடிப்பாகும் இது. தற்கொலைப் படையாக செயல்பட்ட சல்மான் அபேதியின் சகோதரனான இஸ்மாயில் அபேதி என்பவரை காவல்துறையினர் லிபியாவில் கைது செய்துள்ளனர். தற்கொலைப்படையாக செயல்பட்ட அபேதி தனியாக செயல்படவில்லை என்று ஏற்கனவே சந்தேகம் எழுந்தது. அபேதி சகோதரர்கள் லிபியா நாட்டவர் என்றும், இதில் சல்மான் அடிக்கடி சொந்த நாடு சென்று பெற்றோரை சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அபேதியின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு சிறிதளவு தகவல் கிடைத்திருந்தது என்றும் அது லிபியாவில் நடந்தவை என்றும் சொல்லப்படுகிறது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் பொதுமக்களை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது, பக்கிங்ஹாம் அரண் மனையின் முன்பு நடைபெறும் பாதுகாவலர் பணி மாறும் நிகழ்ச்சியும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜூன் 8 ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மீண்டும் தொடங்கவுள்ளது. ஒருவேளை மேலும் தாக்குதல்கள் தொடரும் என எச் சரிக்கை விடப்பட்டுள்ளதால் தேர்தலே கூட தள்ளிப்போகலாம் என்ற ஊகமும் எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்