ரோம் இத்தாலியில் படகு கவிழ்ந்து 200 பேர் தண்ணீரில் மூழ்கினர். இதில் 30 சடலங்கள் மீட்கப்பட்டன. லிபியாவில் இருந்து ஏராளமான அகதிகள் இத்தாலிக்கு சென்றுகொண்டு இருக்கிறார்கள். நேற்று ஒரு மரப்படகில் லிபியா கடலோரப்பகுதியில் இருந்து 20 கடல் மைல் தூரத்தில் அகதிகள் வந்து கொண்டு இருந்தார்கள். இதில் 500 முதல் 700 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதிக அளவு பயணிகள் பயணம் செய்ததால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் 200 பேர் தண்ணீரில் மூழ்கினர். இதையடுத்து லிபியா மற்றும் இத்தாலி சார்பில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. 15 குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகள் உள்பட 30 சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தண் ணீரில் மூழ்கியவர்கள் சடலத்தை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பலியானவர் களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்