வாஷிங்டன் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது இந்தியா மேலும் தாக்குதல்களை முன்னெடுக்க உள்ளதாக அமெரிக்கா கூறி யுள்ளது. அமெரிக்காவின் ஆயுத சேவைக்கான செனட் குழுவிடம் பேசிய பாதுகாப்பு உளவு அமைப்பு இயக்குநர் வின்சென்ட் ஸ்டிவர்ட் இதனை தெரி வித்துள்ளார். உலக முழுவதும் நிகழும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றி குறிப்பிட்டுள்ள அவர் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தி யாவுக்குள் ஊடுருவதை தடுக்கும் வகையில் இந்தியா தாக்குதல்களை மேற்கொள்ளும் என்றார். இதற்காக இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். உலக முழுவதும் தீவிரவாதத்துக்கு எதிரான கருத்து பரவி உள்ளதே அமெரிக்காவின் இந்த தகவல் உணர்த்துவதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியிருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவு சீர் குலைந்ததற்கு தீவிரவாத தாக்குதல்களே காரணம் என்று அமெரிக்கா கருதுகிறது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்களுக்கு அந்நாட்டின் தீவிரவாதிகளால் ஆபத்து உள்ளது என்பதும் அமெரிக்காவின் எச்சரிக்கையாகும். பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்குதல் நடத்தி ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் அழித் துள்ள நிலையில் இதற்கு ஆதரவான கருத்து அமெரிக்காவிடம் இருந்து வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்