இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் சல்மான் அபேதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு வயது 22. இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், நேற்று அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது, திடீரென சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. தற்கொலைப்படைத் தாக்குதல்மூலம் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், குண்டை வெடிக்கச்செய்த தீவிரவாதி உள்பட 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில், குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படும் சல்மான் அபேதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு வயது 22. அபேதி 1994 ஆம் ஆண்டு பிறந்தார். லிபியாவைச் சேர்ந்த அவரது குடும்பம், லண்டனுக்கு அகதியாக வந்து குடியேறியது. சல்போர்டு பல்கலைக்கழகம், அபேதி ஒரு மாணவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அபேதி, லிபியா சென்று வந்திருப்பது தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தெருக்களில் ராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்