பாங்காங் பாங்காங், தாய் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் இன்று குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கு மிகவும் பிரபலமான இந்த மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மருத்துவமனையின் சுற்றுபுறத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணைகளில் வெடிகுண்டின் பேட்டரிகள் மற்றும் கம்பிகளின் தடயங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வெடிகுண்டு மருத்துவமனையின் மருந்தகத்தின் அருகே உள்ள ஒரு கண்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டு வெடிக்க வைத்துள்ளனர். குண்டுவெடிப்பின் போது கண்ணாடி துண்டுகள் பறந்து வீசியதில் தான் அதிகமான நபர்களுக்கு காயம் ஏற்பட்டள்ளது. காயமடைந்தவர்களில் 3 பேர் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளனர் என்றும், அவர்களுக்கு கழுத்து மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற அனைவர்களுக்கு சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளது என்றும் போலீசார் கூறியுள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் தாய்லாந்தின் எல்லை அருகே உள்ள ஷாப்பிங் மாலில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 60 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்