கொழும்பு இலங்கையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கிளிநொச்சியில், போலீசார் மீது, மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அடையாளம் தெரியாத அவர்களை, ராணுவம் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர். இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத் திற்கும், பல ஆண்டுகளாக நடந்து வந்த போர், 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், போரில் உயிர்த்தியாகம் செய்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இலங்கையின் வடக்கு பகுதியான, கிளிநொச்சி, முள்ளி வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில், சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, அந்த பகுதிகளில், போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, கிளிநொச்சி போலீஸ் நிலையம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கிருந்து பதறியடித்து ஓடினர். இதையடுத்து, தேடும் பணியில் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் அப்பகுதியில் துப்பாக்கியின் சில பாகங்கள் மட்டுமே கிடைத்தது, போலீசார் தெரிவித்து. தேடும் பணி தொடர்வதாக, அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனால், இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டனர். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறியதாவது: வடக்குப் பகுதியில் ஒன்றரை லட்சம் ராணுவத்தினரை இலங்கை அரசு குவித்திருப்பது ஏன். ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் அமைதி, பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் விளைவுகள், தமிழ் மக்களின் ஒற்று மைக்கு வித்திட வேண்டும், என்றார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்