சீன மணப்பெண் ஒருவர், புகைப்படம் நன்றாக வருவதற்காக தனது திருமண உடையில் தீவைத்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திருமண நிகழ்ச்சியை சிறந்த புகைப்பட கலைஞர்கள் சிறந்த முறையில் படம் பிடித்து அதனை நமக்கு இனிமையான நினைவுகளாக அமைய ஆல்பம் அமைத்து தருவார்கள். இங்கே ஒரு பெண் தனது திருமணம் புகைப்படம் நன்றாக வருவதற்காக மிக ஆபத்தான முறையை கடைபிடித்து உள்ளார். சீன மீடியாக்கள் தெரிவித்த தகவலின்படி சீனாவைச் சேர்ந்த ஒரு மணப்பெண் தனது மணப்பெண் உடையுடன் புகைப்படம் சிறப்பாக வர வேண்டும் என போட்டாகிராபரை கேட்டுக்கொண்டு உள்ளார். அதற்கான் போட்டா ஷூட், ஒரு காட்டு பகுதியில் எடுக்கப்பட்டது. சிறப்பான புகைப்படம் வரவேண்டி மணப்பெண்ணும் போட்டாகிராபரும் சேர்ந்து மண்ப்பெணிண் திருமண உடையில் தீவைத்து உள்ளனர். புகைப்படத்திற்கு லைட்டிங் நன்றாக கிடைக்க இதை செய்து உள்ளனர். ஆனால் விளைவு விபரீதமாக மாறி விட்டது. தீ மளமளவென உடை முழுவதும் பரவியுள்ளது. தீ எரிவதை கண்ட மணப்பெண் அலறியடித்து ஓடி உள்ளார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் சேர்ந்து தீயை அணைத்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்