நீஸ் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தின் போது வெடிபொருட்கள் அடங்கிய லாரியை தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டவாறு வேக ஓட்டிவந்து பெறும் விபத்தை ஏற்படுத்தியுள்ளான். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இதைதொடர்ந்து பிரான்ஸில் அவசர நிலை 3 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஃப்ரான்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார். கனரக வாகனத்தை தீவிரவாதி வேகமாக ஓட்டிச்சென்றதால் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். லாரி வெடிக்கச் செய்து தப்ப முயன்ற தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். சம்பவம் நடைபெற்ற பகுதியில் தீவிரவாத தடுப்பு பிரிவினரும், கூடுமல் போலீசாரும் விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே ஆலோசனைப்படி நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் பாரீசிஸ் 130 பேரை பலி கொண்ட தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட 2வது மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவாகும்
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்