யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் பளை எனுமிடத்தில் இந்த அதிரடி தாக்குதல் நிகழ்ந்துள்ளது. சேத விவரம் எதுவும் வெளியிடப்படாத அதேவேளை சம்பவ இடத்தில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பெரும் பதற்ற சூழல் நிலவுவதாகவும் இலங்கையில் செய்திகள் வெளியாகின. T 56 ரக துப்பாக்கி கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் மிகப்பெரும் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் யாழ்ப்பாண இராணுவத்தலைமை இது முள்ளிவாய்க்கால் நினைவு நாளுக்குக்கான அதிரடியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது. மேலும் விடுதலைப் புலிகளை முற்றிலும் ஒழித்து விட்டதாக கூறிவரும் படைத்தரப்பிடையே இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே நேற்று அதிகாலை போலீசார் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவித்திருந்தனர். மேலும் பல பிரதேசங்களில் சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு தேடுதல் நடவடிக்கையும் தொடர்கிறது.யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலால் குழம்பியிருக்கும் இலங்கை அரசு உடனடியாக இதுகுறித்து உரிய அறிக்கையினை வழங்குமாறு படைத்தரப்பைக் கேட்டுக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது
மேலும்வரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியமளிப்பதற்கு
மேலும்இந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்
மேலும்