கிழக்கு சீன கடற்பரப்பில் பறந்து சென்ற அமெரிக்காவின் விமானத்தை சீன விமானம் இடைமறித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.வான்பரப்பில் கதிர்வீச்சை கண்டறியும் முயற்சியில் அமெரிக்காவின் U.S. WC-135 விமானம் ஈடுபட்டிருந்தது. அப்போது, வானில் பறந்து கொண்டி இந்த அமெரிக்க விமா னத்தை, சீனாவின் இரண்டு SU-30 ஜெட் விமானங்கள் இடைமறித்துள்ளன. அமெரிக்க விமானம் மேல்நோக்கி பறந்த போது, இந்த இரண்டு ஜெட் விமானங்களும் இடையில் குறுக்கிட்டு அமெரிக்க விமானத்தின் பயணத்திற்கு இடை யூறு ஏற்படுத்தியுள்ளன.இது ஒரு தலைகீழான சூழ்ச்சி என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது, மேலும் முறையற்ற நடந்துகொண்ட சீனாவின் செயல்பாடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவால் சாத்தியமான அணுசக்தி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதா என்பதற்கான ஆதாரங்களை கண்டறிய U.S. WC-135 விமானம் முன்னர் ஏற் கனவே பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்