சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் கொரிய பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா தன்னுடைய இரண்டாவது போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகனை கொரிய தீபகற்ப பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள், ஜப்பான் கடலில் பராமரிப்பு மற்றும் கடலின் சோதனைகளை ஆராயந்த பின்னரே போர்க் கப்பல் கொரிய பகுதிக்கு அனுப்பப்பட்டது. இங்கு போர் விமானங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், போர் திறனை உறுதிப்படுத்தவும் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன், நீர் மூழ்கி போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். மிக்ஸிகன் ஆகியவை தென்கொரியா வில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்