img
img

110.5 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன ஓவியம்
வெள்ளி 19 மே 2017 17:10:33

img

அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில், மறைந்த ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட் வரைந்த ஓவியம் ஒன்று 110.5 மில்லியன் டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் ஆயில் ஸ்டிக், அக்ரிலிக் மற்றும் ஸ்ப்ரே வகை பெயிண்ட்களை கொண்டு வரையப்பட்ட பெயரிடப்படாத இந்த ஓவியம்தான் இது. ஓர் மண்டையோடு அமைப்பைக் கொண்ட முகத்தை இந்த ஓவியம் சித்தரிக்கிறது. ஜீன் மைக்கேல் பாஸ்குவேட்டின் இந்த ஓவியத்தை 41 வயதுடைய ஜப்பானிய பேஷன் தொழில்முனைவர் யுசாகா மேஸாவா ஏலத்தில் எடுத்துள்ளார். ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட்டின் முந்தைய மிகவும் விலை யுயர்ந்த ஓவியத்தை காட்டிலும் இது கிட்டத்தட்ட இருமடங்கு விலையாகும். அமெரிக்காவை சேர்ந்த ஓவியக் கலைஞர்கள் வரைந்து விற்பனையான படைப்புகளிலேயே இது மிகவும் அதிக விலைக்குப் போன படைப்பாகும். அதுமட்டுமின்றி பல சாதனைகளையும் இந்த ஓவியம் முறியடித்துள்ளது. 1980ம் ஆண்டிலிருந்து 100 மில்லியன் டொலருக்கு அதிகமான தொகைக்கு ஏலம் போயுள்ள முதல் ஓவியம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. புகழ்பெற்ற ஓவியர் ஜீன் மைக்கேல் பாஸ்குவேட் தனது 28 வயதில் 1988ம் ஆண்டு மறைந்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img