இது குறித்து வேதிகே அமைப்பின் தலைவர் நிலேஷ்கவுடா செய்தியாளர்களிடம் கூறும்போது, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் கர்நாடகம், தமிழகம் உள்பட நான்கு மாநிலங்களுக்கு காவிரி நீர் பகிர்ந்தளித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கில் அம்மாநில அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தி வருகிறது. கர்நாடகாவுக்கு கிடைக்கும் பங்கை பயன்படுத்தி மண்டியா, ராம்நகரம், பெங்களூரு ஊரக மாவட்டங்களில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்துவதற்காக மேகதாதுவில் அணைகள் கட்டும் திட்டம் செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இத்திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துவருவது சரியல்ல. தமிழகத்திற்கு ஆண்டுதோறும் காவிரியில் இருந்து 190 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படுகிறது. இருப்பினும் கர்நாடக அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்ன நியாயம்? மேகதாது அணைகள் கட்டும் திட்டத்தை துளியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என்று கர்நாடக அரசை வலியுறுத்தி வரும் நாளை மேகதாதுவில் இருந்து பெங்களூரு நோக்கி நூற்றுக்கணக்கான தொண்டர்கள் நடைபயணம் செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்