அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் இல்லாத நேரத்தில் அவரது மகளான இவான்கா டிரம்ப் முக்கியமான கூட்டம் ஒன்றிற்கு தலைமை வகித் துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களை கடத்தி வந்து அடிமைத்தனமாக பணியில் அமர்த்தும் சட்டரோத நடவடிக்கை தொடர்பாக நேற்று டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய கூட்டத்தில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக இதே தினத்தில் Connecticut நகரில் மற்றொரு முக்கிய நிகழ்ச்சி இருந்ததால் அதில் பங்கேற்க டொனால்ட் டிரம்ப் சென் றுள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற வட்ட மேஜை கூட்டத்தில் டிரம்பின் மூத்த மகளான இவான்கா பங்கேற்று தலைமை வகித்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியரவு கட்சி தலைவர்கள் மட்டுமின்றி ஜனநாயக கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இக் கூட்டத்தில் சுமார் 2 நிமிடங்கள் பேசிய இவான்கா மனித கடத்தலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது தனது தந்தை அதிபராயாக தெரிவு செய்யப்பட்டாலும் முக்கிய விவகாரங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க தனது பங்களிப்பினை வழங்குவேன் என இவான்கா தெரிவித்துள்ளார். அதிபரும் தந்தையுமான டொனால்ட் டிரம்ப் இல்லாத நேரத்தில் அவரது பதவியில் இருந்து இவான்கா ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்