முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் தற்போதும் ஆபத்தான மிதிவெடிகள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடைபெற்ற உள் நாட்டு யுத்தம் நந்திக்கடல் பகுதியிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலும் இந்த நந்திக்கடல் பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித் திருந்தது. எனினும், யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களை கடந்த நிலையிலும் நந்திக்கடல் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் மிதிவெடிகள் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. மீன்பிடிப்பதை வாழ்வாதாரத்தொழிலாக செய்யும் அப்பகுதி மக்கள் நந்திக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடற் கரையை அண்மித்த பகுதிகளில் இந்த மிதிவெடிகள் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்