img
img

நான் பெண்ணியவாதி அல்ல...'
செவ்வாய் 16 மே 2017 14:36:36

img

’மிஸ் அமெரிக்கா 2017’ பட்டத்தை 25 வயது விஞ்ஞானி காரா மெக்கல்லோ (Kara McCullough) வென்றுள்ளார். ‘மிஸ் அமெரிக்கா’ போட்டி நேற்று முன்தினம் அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இறுதியில், வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கொலம்பியாவைச் சேர்ந்த காரா மெக்கல்லோ, மிஸ் அமெரிக் காவாகத் தேர்வுசெய்யப்பட்டார். காரா, வேதியியல் படிப்பில் பட்டம் பெற்று, அணு விஞ்ஞானியாக (Nuclear scientist) அமெரிக்க அணு ஒழுங்குமுறை ஆணையத்தில் பணியாற்றி வருகிறார். மிஸ் அமெரிக்கா போட்டியில், நடுவர்களின் சில கேள்விகளுக்கு காரா அளித்த பதில்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொரு ளாக மாறியுள்ளது. அதுமட்டுமன்றி, இந்தப் போட்டி முழுவதும் தன் சுருள் தலைமுடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்யாமல் அப்படியே காட்சி அளித்தார். காராவின் அழகான சுருள் கூந்தலுக்கு ஃபேன்ஸ் குவிந்துவிட்டனர்! 'அமெரிக்க நிறுவனங்கள், பணியாளர்களுக்கு வழங்கும் சுகாதார சேவை சலுகையா அல்லது அவர்களின் அடிப்படை உரிமையா?' என்று காராவிடம் நடு வர் கேள்வி எழுப்பினார். அதற்கு காரா சற்றும் யோசிக்காமல், சுகாதார சேவைகள், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சேவைகள், பணியாளர்களுக்கு வழங் கப்படும் சலுகைதான் என்றார். 'மருத்துவக் காப்பீடு என்பது பணியாளரின் அடிப்படை உரிமை' என்று நெட்டிசன்ஸ் காராவை சாடி வருகின்றனர். இதையடுத்து, ’நீங்கள் பெண்ணியவாதியா?’ என்று நடுவர்கள் கேட்டதற்கு, ‘நான் நிச்சயமாக பெண்ணியவாதி கிடையாது. பெண்கள் ஆண்களுக்குச் சம மானவர்கள். 'Feminist' என்ற வார்த்தையைக் காட்டிலும் 'Equalist' என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்கிறேன்’ என்றார். காராவின் இந்தப் பதி லுக்கு, அரங்கே அதிரும்படி கைத்தட்டல் எழுந்தது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img