எதிர்ப்பை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க உலக நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியா உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வரு கிறது. கடந்த ஆண்டு வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனை, உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் வடகொரியா மீது பொரு ளாதார நெருக்கடிகள் விதிக்கப்பட்டன. அத்துமீறி செயல்பட்டு வரும் வடகொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இதனால் அமெரிக்கா போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் என தொடர்ந்து கொரியா தீபகற்பத்திற்கு அனுப்பி வருகிறது.இந்த பதற்றத்தால் இரு நாடுகளுக்கும் போர் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த சோதனை வட கொரிய தலைநகர் பியோங்யாங்கின் உள்ள குஸாங்கிலிருந்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏவப்பட்ட ஏவுகணை 700 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்துள்ளது. இந்த செயலால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, வடகொரியா மீது வலுவான பொருளாதார தடை விதிக்க அழைப்பு விடுத் துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர், வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என் றும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்ற சூழலை இயல்புக்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்