அமெரிக்க பள்ளிகளில் ஒபாமா ஆட்சியில் வழங்கப்பட்ட சத்தான உணவுகளின் முக்கியத்துவத்தை குறைத்த டிரம்பை, மிசேல் ஒபாமா கடுமையாக சாடி யுள்ளார். ஒபாமாவின் மனைவி மிசேல் அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்தபோது அமெரிக்க குழந்தைகள் உடல் பருமனைக் குறைக்கவும், உடலை வலுப்படுத்தவும் சத்தான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற் கொண்டார். ஆனால் பின்னர் ஆட்சிக்கு வந்த டிரம்ப் நிர்வாகம் பள்ளிகளில் வழங்கப்படும் சத்தான உணவுகளின் முக்கியத்துவத்தை குறைத்துள்ளது. இதுகுறித்து தற் போது பேசியுள்ள மிசேல், நம் குழந்தைகள் பள்ளியில் நல்ல உணவுகளை சாப்பிடுவதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? ஒருவர் நம் குழந்தைகள் குப் பையைச் சாப்பிடுவதற்கு சம்மதம் என்று சொல்கிறார் என்றால், அதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதை எப்படி நாம் கொண்டாட முடியும்? அமெரிக்காவில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் விற்கும் உணவுகளில் உள்ள கலோரி எண்ணிக்கை அளவை பட்டியலிட வேண்டும் என்பதை டிரம்ப் தள்ளிபோட்டுள்ளார். இதனால், உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பது அதை வாங்கி உண்பவர்களுக்குத் தெரியாமலேயே போகும் என கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்