வட கொரியாவில் கிம் ஜாங் ஆட்சி கவிழ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்நாட்டுடன் போரிட வேண்டும் என பிரபல ஓவியர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட கொரியாவை சேர்ந்தவர் Song Byeok. பிரபல ஓவியரான இவர் தன்னுடைய நாட்டில் நடக்கும் கொலைகார ஆட்சியை சகித்து கொள்ள விரும்பாமல் கடந்த 2002ல் அவர் தென் கொரியாவுக்கு தப்பி சென்றுள்ளார். தற்போது அந்நாட்டில் வாழ்ந்து வரும் Song கூறுகையில், வட கொரியா அமைதியாகவும், அந்நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் இருக்க அந்நாட்டின் மீது அமெரிக்கா போர்தொடுக்க வேண்டியது அவசியமாகும்.மேலும் அவர் கூறுகையில், இந்த இளம் வயதில் கிம் ஜாங்கின் செயல் என்னை கவலையடைய செய்கிறது. எதிர்பாராத விடயத்தை செய்வதே அவரின் குணமாக உள்ளது. அவர் தென் கொரியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.வட கொரியாவின் சர்வாதிகாரம் தன் வாழ்நாளுக்குள் முடிவுக்கு வரும் என நம்புவதாக கூறியுள்ள Song, 80களில் நடந்த மாதிரி கொரிய போர் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளதாகவும் அப்போது போலவே பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் இழப்பார்கள் எனவும் Song கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்