சீனாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்துள்ளனர். சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் காலை 5.58 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டது. 50க்கும் மேற்பட்ட வீடுகள் நிலநடுக்கம் காரணமாக சரிந்துள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என சீன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு ஆகும். சீனாவில் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 90,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத் தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்