வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்துவதற்கு தயாராக இருக்கிறது என அந்நாட்டின் தூதரக அதிகாரி Choe I தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார். இதுவரை 6 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்பட்ட 6 வது சிறிய ரக ஏவுகணையானது வெடித்து சிதறி தோல்வியில் முடிந்தது.இந்நிலையில், மீண்டும் இதனை தொடர இருப்பதாக வடகொரியாவின் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவிலிருந்து வரும் அழுத்தம் அதிகரித்துள்ளது.ஆனால், நாங்கள் இதற்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம். அடுத்த ஏவுகணை தயாராக உள்ளது. அதிபரின் உத்தரவிற்காக நாங் கள் காத்திருக்கிறோம் என அணு ஆயுத அறிவியலாளர் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டுள்ள அமெரிக்க இராணுவ படைகளை தாக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களது அணு ஆயுத வசதிகளை முன் னேற்றப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எங்கள் நாடு மற்றும் நாட்டு மக்கள் மீது அமெரிக்கா எந்த வகை தாக்குதல் நடத்தினாலும் பதில் தாக்கு தல் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என தூதரக அதிகாரி கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்