பிரித்தானியா கடுமையான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரி யாவை தளமாக கொண்ட ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தாக்குதல் நடத்தி வந்த சுமார் 350 தீவிரவாதிகள் பிரித்தானியாவை வந்தடைந் துள்ளதாக அந்தப் பிரிவு எச்சரித்துள்ளது. Takfiri என்ற குழுவுடன் இணைந்து போராட பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பயங்கரவாதிகள், மீண்டும் பயங்கரவாத குழுவாக நாட்டுக்குள் புகுந் துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவுக்குள் புகுந்துள்ள பயங்கரவாதிகளை முழுமையாக காண்காணிப்பது, பாதுகாப்பு படைகளுக்கு முடியாத காரணமாகும். அண்மையில் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு வெளியே காரை ஒன்றை செலுத்தி மேற்கொண்ட தாக்குதலில் நான்கு பேர் கொல்லப் பட்டனர். பொலி ஸார் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவத்தின் பின்னர் பிரித்தானியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறைந்தது 800 பிரித்தானியர்கள் பல்வேறு Takfiri குழுக்களுடன் இணைந்து போராடுவதற்காக சிரியா மற்றும் ஈரானுக்கு சென்றுள்ளனர். அவர் மீளவும் நாட்டிற்குத் திரும்புவதன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறித்த குழுக்களினால் பயிற்றுவிக்கப்பட்ட 5000 பயங்கரவாதிகள் ஐரோப்பாவில் உள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 100 நாடுகளை சேர்ந்த 30000 பேர் Takfiri தீவிரவாத குழுவில் இணைவதற்காக சிரியா மற்றும் ஈராக்கிற்கு பயணித்துள்ளனர். இந்த தகவலை கடந்த பெப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றவியல் புலனாய்வு நிறுவனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Daesh பயங்கரவாதிகள் முக்கியமாக சிரியா மற் றும் அதன் கிழக்கு அண்டை நாடான ஈராக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்