இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியின் நாஜிப்படையை வென்ற 72-ஆம் ஆண்டு நினைவு தின பேரணி ரஷ்யா தலைநகரான மாஸ்கோ நகரில் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தன் நாட்டின் இராணுவ பலத்தை காட்ட வேண்டும் என்பதில் புடின் தீவிரமாக உள்ளதாகவும், அதன் காரணமாக இராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த பயிற்சியின் போது ஆயிரத்திற்கும் மேலான இராணுவ வீரர்கள கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி 70-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவைகளும் இதில் உள்ளடங்கியதாக கூறப்படுகிறது. ரஷ்யா உலகின் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளதாகவும், அதன் பெயர் Mi-26 எனவும் குறித்த தினத்தன்று பேரணி நிகழ்ச்சியின் போது பங்குபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்கள் பயிற்சியின் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் முதல் உலகப்போரின்போது ஜேர்மனியிடம் தோற்றுப் போன ரஷ்யா, இரண்டாம் உலகப்போரின் போது இரும்பு மனிதர் ஸ்டாலின் தலைமையில் ரஷ்ய மக்கள் விஸ்வரூபம் எடுத்து ஹிட்லருக்கு சரியான பதிலடி கொடுத்தனர். ஜேர்மனி இராணுவத்தை ஓட ஓட விரட்டி வெற்றி கண்டது ரஷ்யா. காரணம் இயற்கை ரஷ்யர்களுக்கு சாதகமாக அமைந்ததே. இந்த வெற்றியை ரஷ்யா உற்சாகமாக பல நாட்டுத் தலைவர்களை அழைத்து கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்