அமெரிக்காவின் வெள்ளை மாளிகை விரைவில் வெடித்து சாம்பலாகும் என வடகொரியா அறிவித்துள்ளது. வட கொரியா - அமெரிக்கா இடையே எந் நேரத்திலும் போர் தொடங்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில், வட கொரியா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா வட கொரியாவின் தலைநகர் Pyongyangஐ அழிக்க திட்டமிட்டுள்ளது. இதை பொறுத்து கொள்ள முடியாது. அதற்கு பதிலடியாக நாங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை வெடித்து சாம்பலாக்குவோம் என தெரிவிக் கப்பட்டுள்ளது. மேலும், 330,000 அமெரிக்க ராணுவத்தினர் வட கொரியாவுடன் போர் தொடுக்க ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. குற்றங் கள் நிறைந்த அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் வரலாறு விரைவில் முடிவுக்கு வரும் என தெரிவிக்கபட்டுள்ளது. அராஜகத்தின் உருவம் அமெரிக்கா என விமர்சித்துள்ள வட கொரியா, நாங்கள் நடத்தப் போகும் அணு ஆயுத தாக்குதலில், உலகின் சக்தி வாய்ந்த நாடாக திகழும் அமெரிக்கா மீண்டும் இயல்பு நிலைக்கு எழ முடியாத அளவுக்கு மாறி விடும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வட கொரிய மக்களின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்தியவர் கிம் ஜாங் எனவும் அந்நாட்டு மீடியா அவருக்கு புகழாரம் சூட்டி யுள்ளது. ஏற்கனவே பலமுறை ஏவுகணை பரிசோதனையை வட கொரியா நடத்தியுள்ள நிலையில், விரைவில் ஆறாவது முறையாக அணுகுண்டு பரிசோதனையை நடத்தவுள்ளது போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்