ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கான இணக்கப்பாடு மீண்டும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கும், ஆஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போதே, ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகளை அமெரிக்காவில் குடியேறுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பினால் முன்னதாக நிராகரிக்கப்பட்டஅகதிகளுக்கான ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து தீர்மானிக் கப்பட்டுள்ளது. ஒபாமா அரசாங்கத்தினால், ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் இதற்கான ஒப்பந்தம் முன்னதாக செய்து கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மானஸ் மற் றும் நவுறு தீவுகளின் முகாம்களில் உள்ள 1200அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு இணக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்