வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை வேரோடு அழிக்க சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயார் செய்யும் பணியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. வடகொரியா உலக நாடுகளை அச்சுறுத்தும் வண்ணம் தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் அதற்கு அந்நாடு செவி சாய்க்கவில்லை.அதுமட்டுமில்லாமல், ஜப் பான் கடலுக்குள் வடகொரியா ஒரு முறை ஏவுகணைகளை செலுத்தி தாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை அந்நாட்டுக்கு காட்டியது.இனியும் இதை யெல்லாம் பொறுக்க முடியாது என வடகொரியாவின் அணு ஆயுத தளங்களை அழிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஜப்பான் அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்காவில் தயாரான சக்தி வாய்ந்த ஆயுதங்களை நாங்கள் வாங்கவுள்ளோம்.Tomahawk ஏவுகணை என்னும் பயங்கர ஏவுகணையை வட கொரியா அணு ஆயுத தளங்களை தகர்க்க பயன்படுத்தவுள்ளோம் என அவர்கள் கூறியுள்ளனர்.சிரியாவின் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்த டொனால்டு டிரம்ப் இந்த Tomahawk ஏவுகணை தான் பயன்படுத்தினார். மேலும், எங்களுக்கு ஆயுதங்களை தர அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஜப்பான் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை எந்நேரத்திலும் நடத்தலாம் மற்றும் தங்கள் மீதும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் தான் ஜப்பான் இதை செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டல்களை எதிர்கொள்வது குறித்து ஏற்கனவே தீவிர ஆலோசனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்