கடல் எல்லையைக் குறிக்கும் விதத்தில் பெயர்ப்பலகையைத் திறந்துள்ளது, இலங்கை. இந்தியாவின் எல்லைப் பகுதியான தனுஷ்கோடிக்கும் இலங் கையின் தலைமன்னாருக்கும் இடையே 20 மணல் திட்டுகள் உள்ளன. இவை, கடல்நீரின் பெருக்கத்தைப் பொறுத்து மாறுபடும். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லாமல் இருக்கவும், இலங்கையிலிருந்து வருபவர்கள் ஊடுருவல் செய்யாமல் இருக்கவும், நமது எல்லைப் பகுதியான 5-ம் மணல் திட்டில், 'இந்தியா' என்ற பெயர்ப்பலகையை இந்தியக் கடற்படையினர் ஏற்கெனவே வைத்துள்ளனர். தற்போது, இலங்கை அரசும் தலைமன்னாரிலிருந்து 5-வது மணல் திட்டில் தங்கள் நாட்டுக் கொடியுடன், 'இலங்கை' என எழுதப்பட்ட பெயர்ப்பலகையை வைத்துள்ளது. தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாகக் குற்றம் சாட்டி, அவர்களைக் கைதுசெய்வதும், படகுகளைப் பறிமுதல்செய்வதும், கொடூரமாகத் தாக்குவதும் வாடிக்கையாகிவருகிறது. இந்த நிலையில், இந்தப் பெயர்ப்பலகை எந்த அளவுக்குப் பயன்தருமோ!
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்