img
img

மலேஷியாவில் இந்துக்களை இழிவு செய்யும் பாடத்துக்கு எதிர்ப்பு
புதன் 15 ஜூன் 2016 14:24:44

img

கோலாலம்பூர்:மலேஷியாவின் முன்னணி பல்கலையில், இந்து மதத்தை இழிவாக சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பாடத்துக்கு, அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேஷியாவின் முன்னணி பல்கலையாக, யு.டி.எம்., எனப்படும், 'யுனிவர்சிட்டி டெக்னாலஜி மலேஷியா' திகழ்கிறது. இப்பல்கலைக்காக உருவாக்கப்பட்ட ஒரு பாடப்பகுதியில், இந்துக்கள், தங்கள் உடலில் உள்ள அழுக்கை, நிர்வாண நிலை அடைவதற்கான, மத சம்பிரதாயங்களில் ஒன்றென கருதுவதாக கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்துக்கள் சுத்தம் இல்லாதவர்கள் என்றும், அவர்களுக்கு நாகரிகத்தை கற்றுத்தந்தது இஸ்லாம் மதமே என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு, மலேஷியாவில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, யு.டி.எம்., பல்கலை துணைவேந்தருடன் பேசியுள்ளதாகவும், அவர், தவறை சரி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும், மலேஷிய கல்வித்துறை துணை அமைச்சர் கமலநாதன் கூறியுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img