வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு நாடுகள் ஒவ்வொன்றாக களமிறங்கும் நிலையில் போருக்கு நாள் குறிக்கப்படுகிறதா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான மோதல் போக்கு நாளுக்குநாள் சூடுபிடித்து வருகிறது. தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிரான கருத்து, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணுஆயுத சோதனைகளை நடத்துவது என வட கொரியா அமெரிக்காவை ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவும் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் என தினமும் கொரிய தீபகற்பத்துக்கு அருகே அனுப்பி, எச்சரிக்கை செய்து வருகிறது. இருப்பினும் 'வடகொரியாவுக்கு எதிராக, அமெரிக்கா கண்மூடித்தனமான நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொண்டால், ஒரு முழுமையான போரை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என வடகொரியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இந்த மோதல் போக்கு முற்றி வருவதோடு உலக நாடுகள் பல அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியுள்ளன. ஜப்பான் தனது நாட்டின் பாரம்பரியமான மற்றும் மிகப்பெரிய போர்க்கப்பலான 'இஸூமோ' போர்க்கப்பலை அமெரிக்காவுக்கு ஆதரவாக கொரிய தீப கற்பத்துக்கு அனுப்பியுள்ளது. இது போர் தொடுப்பதற்கான அணி சேருதல் என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. அணுஆயுத சோதனையை நிறுத்த முடியாது என்று வடகொரியா திட்டவட்டமாக மறுத்து விட்டதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக் காவின் 'கார்ல் வின்சன்' என்ற மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலும் கொரிய கடல்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடகொரி யாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜப்பானின் 'இஸூமோ' போர்க்கப்பல் அனுப்பப்பட்டு அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு ஆதரவா கவும், எரிபொருள் அளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. தவிர, நீரிலும், நிலத்திலும் சென்று தாக்கக்கூடிய பிரான்ஸ் நாட்டின் போர்க்கப்பல் ஒன்றும், ஜப்பான்-பிரிட்டன் கடற்படை கூட்டு போர் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரிய தீபகற்பத்தில் போர்மூளும் சூழல் ஆரம்பித்த சில தினங்களிலேயே அமெரிக்கா மற்றும் தென்கொரியப் படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் மூன்றாம் உலகப்போர் உருவாவதற்கான ஆரம்பமாக இருக்கலாம் என்று உலக நாடுகள் இப்போதே அச்சத்தில் உள்ளன. இதனிடையே, ட்ரம்ப், கிம்-ஜோங் உன்-வுடன் பேச்சுவார்த்தை நடத்தத்தயார். அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தால், அதை சந்தோஷமாக வரவேற் கிறேன் என்று அறிவித்தார். ட்ரம்ப் இப்படிக் கூறியிருப்பது, போர் ஏற்படாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கான இறுதி அழைப்பாகக் கூட இருக்கலாம் என்று பல நாடுகளும் கருதுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் இருநாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசி ஒரு நல்ல முடிவை எடுத்தால்தான் போர் ஏற்படாமல் தவிர்க் கப்படுவது டன், உலக நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறான ஒரு நெருக்கடி ஏற் பட்டால் நிச்சயம் எரிபொருட்களின் விலையில் மிகப் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்