பயங்கரமான அணு ஆயுதங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு வட கொரியா கப்பலில் அனுப்புவதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளது. உலகில் நடக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிரடி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆஸ்ரேலியாவின் think-tank நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பில் அதிர்ச்சிமிக்க பல குறிப்புகள் வெியிடப்பட்டுள்ளன. அதில் அண்மை நாட்களாக மிக அவசரமாக வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கப்பலில் பல நாடுககளின் கடல் எல்லைகளுக்கு கடத்துவதாகவும், உரிய நேரத்தில் வடகொரியாவில் இருந்தவாறே அவற்றை இயக்கி பெரும் அழிவுகளை உலகெங்கும் ஏற்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை சார்ந்தே வட கொரியாவுக்கு அமெரிக்காவை தாக்கும் திறன் உள்ளதா என மதிப்பிட முடியும். தங்களால் இது முடியும் என நிரூபிக்கத்தான் வட கொரியா சீனா வழியாக மீன் பிடி கப்பல் மற்றும் நீர் மூழ்கி கப்பல் மூலம் அணு ஆயுதங்களை கடத்தி உலக நாடுகளுக்கு எடுத்து செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கப்பலில் மிகப்பெரும் கொள்கலன்களில் அணு ஆயுதங்கள் கடத்தப்படுவதாகவும், கப்பல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்படுவதால் அதை அவர்கள் அனுமதிக்கிறார்கள் எனவும் அந்த செய்தி விரிகிறது. இந்த நடவடிக்கை தங்களை தாக்க நினைக்கும் அமெரிக்காவை பின்வாங்கச் செய்யும் என என வட கொரியா நினைக்கிறது. உலகம் முழுவதும் 17 மில்லியன் கொள்கலன்கள் கப்பல்களில் உலா வருவதால் அணு ஆயுதங்கள் உள்ள கொள்கலன்களைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என்பதை உணர்ந்தே வட கொரியா இதை செய்வதாக think-tank அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.வட கொரியாவை குறைத்து மதிப்பிட்டால் மிக பெரிய உயிர் இழப்புகளும், பொருளாதார இழப்புகளையும் உலகம் சந்திக்ககூடும் எனவும் think-tank எச்சரித்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்