முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மே மாத தொழிலாளர் தினத்தை துயர நாளாக கடைப்பிடித்தனர். அந்த மக்கள் இன்று நண்பகல் ஒன்றாகக் கூடி அழுதவாறே போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். “நாங்கள் எட்டுவருடங்களாக எமது சொந்த நிலங்களில் தொழில் செய்ய முடியாது இருக்கின்றோம். இவ்வாறான சூழலை மாற்றி எமது சொந்த நிலங்க ளில் மீள்குடியேற வேண்டும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம், தற்பொழுதும் தொடர்கின்றோம் ஆனால் இன்னும் தீர்வு கிடைக்க வில்லை” என்று போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு இன்று 62ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்