வட கொரியா எந்த நேரத்திலும் தனது அடுத்த அணு ஆயுத சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.வட கொரியா இதுவரை எட்டு முறை அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.இது எல்லாமே தோல்வியிலேயே முடிந்தன.வட கொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றன. வட கொரியாவை எச்சரிக்கும் வகையில் அமெரிக்கா போர் கப்பல்களை அங்கு அனுப்பியுள்ளது.இந்நிலையில், ஒன்பதாவது முறையாக மீண்டும் அணு ஆயுத சோதனையை வட கொரியா எந்த நேரத்திலும் தொடங்க திட்டமிட்டுள்ளது.இது குறித்து வட கொரியா வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எங்களின் அடுத்த அணு ஆயுத சோதனையை தொடங்குவோம்.இதற்காக கடற்கரையில் அதிகளவில் ஏவுகணைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவை எதிர்கொள்ள சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை தயாராக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்