இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்தாவில் இருந்து தெற்கே 90 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது சியான்ஜூர் மாவட்டம். இப்பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த நான்கு கார்கள் மீது வரிசையாக பயங்கரமாக மோதியது. அத்துடன் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இடித்துத் தள்ளிய பேருந்து, இறு தியில் ஒரு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயம் அடைந்துள்ளனர். பேருந்து கட்டுப்பாட்டை இழப்பதற்கு பிரேக் பிடிக்காதது காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முதற்கட்ட விசாரணையின் முடிவில் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரிய வரும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்