ஹிலாரி கிளிண்டனின் ஜனநாயக கட்சி இணையதளத்தை சீனா ஹேக் செய்திருக்கலாம் என்ற பரபரப்பு கருத்தை டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ளார். அமெரிக்க தேர்தல் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரியும் களமிறங்கினார்கள். தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜனநாயகக் கட்சியின் இணையதளம் மற்றும் ஹிலாரியின் இ-மெயில் ஹேக் செய்யப்பட்டு பல தகவல்கள் வெளியிடப் பட்டன. பின்னர் தேர்தலில் டிரம்பிடம் ஹிலாரி தோல்வியடைந்தார். இணையதள தகவல்கள் வெளியானதால் தான் தனக்கு தோல்வி ஏற்பட்டதாக ஹிலாரி குற்றம் சாட்டினார். இந்நிலையில், இது குறித்து தற்போது பேட்டியளித்துள்ள டிரம்ப், சீனா இந்த ஹேக்கிங்கில் ஈடுபட்டிருக்கலாம்.வேறு யாராவது கூட இதை செய்திருக் கலாம். ஆனால் யார் இதை செய்தார்கள் என குறிப்பிட்டு சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்