காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரீசி மாவட்டத்தில் கணவர், தனது மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்று உடலை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை காணவில்லை என்று கணவர் புகார் அளித்தார். இந்நிலையில் மனைவியின் உடல் லம்பிகிரி பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசாருக்கு கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டு மனைவியின் பெற்றோரிடம் விசாரித்தனர். அப்போது கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணவனை பிடித்து விசாரித்தபோது, நேற்று முன்தினம் மனைவியின் கழுத்தை நெரித்து தாம் கொலை செய்ததாகவும் கொலையை மறைபதற்கே மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டு மனைவி காணமல் போனது போல் நடகமாடியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கொலை செய்ததற்கான காரணத்தை அறிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பி40 எனப்படும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு மட்டுமே இந்த உதவித்
மேலும்40 ஆண்டுகள் உழைத்த விவசாய நிலங்கள் தரைமட்டம்
மேலும்இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் மாதம் வரை போதைப்பொருள் தயாரிக்கும் 19
மேலும்