உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதற்கு ஒருபோதும் செவிசாய்க்க மாட்டோம் என வட கொரியா மீண்டும் நிரூபித்துள்ளது. வடகொரியா மீண்டும் நேற்று காலை 5.30 மணிக்கு புக்சாங் பகுதியில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ‘பேலிஸ்டிக்’ ரக ஏவுகணை ஒன்றை பரிசோதித்துப் பார்த்தது. ஆனால் அந்த ஏவுகணை, விண்ணில் பாய்ந்த சில வினாடிகளில் வெடித்துச் சிதறிவிட்டது. அந்த வகையில், இந்த சோதனை தோல்வியில் முடிந்து விட்டது. இந்த ஏவுகணை ‘கேஎன்–17 பேலிஸ்டிக்’ ரகத்தை சேர்ந்தது என தகவல்கள் கூறுகின்றன. வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்திருப்பதை தென்கொரியாவும், அமெரிக்காவும் உறுதி செய்தன. சீனா மற்றும் அதன் அதிபர் ஜின்பிங்கின் விருப்பத்தை வடகொரியா மதிக்கவில்லை. ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியபோதும், அது மோசமான தோல் வியை கண்டுள்ளது என டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்