அமெரிக்காவில் மூளை உறுப்பு இல்லாமல் பிறந்த குழந்தையின் உடல் உறுப்புகள் பெற்றோரினால் தானமாக கொடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ஒக்லகோமா பகுதியை சேர்ந்தவர்கள் ராய்ஸ்- கெரியங். கர்ப்பமாக இருந்த கெரியங், கருவில் உள்ள குழந்தைக்கு ஈவா என பெயர் சூட்டி யிருந்தார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம்தான் கருவில் வளரும் குழந்தைக்கு மூளை உருவாகாமல் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் ராய்ஸ்- கெரியங் தம்பதியினர் குழந்தையை அழிக்க விரும்பாததால், சிசு வளர்ச்சி அடைந்து முழு குழந்தையாக பிறந்தது. மூளை உறுப்பு இல்லாததால் சிசுவின் உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தையின் தந்தை தனது பேஸ்புக் தளத்தில் “We said hello and goodbye to our sweet Eva... என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த பல்லாயிரக்கானோர் கண் கலங்கினர். உடனே அந்தப் பெற்றோருக்கு ஆறுதலும் பாராட்டும் தெரிவித்திருந்தனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்