பிரித்தானியா தலைநகர் லண்டனில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை விதித்துள்ளது. Croydon, Collyer Avenue பகுதியில் வசித்து வந்த 41 வயதான Jerry Ablorh என்ற நபரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளான். இன்னும் பல சிறுமிகள் Jerry Ablorh ஆல் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகமடைந்துள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்கும் படி அறிவித்துள்ளனர். 5 வயது சிறுமியின் குடும்பத்தில் நட்பாக பழகிய Ablorh, நம்பகத்தன்மை உண்டாக சிறுமியை பூங்கா என பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், இதை பயன்படுத்திய Ablorh ஒரு நாள் அவரது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இதை யாரிடமாவது சொன்னால் தாயாரை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.இந்நிலையில், 2 வருடங்களுக்கு பின் சிறுமியின் குடும்பம் Ablorhஐ விட்டு விலகியதை அடுத்து பெற்றோரிடம் நடந்ததை சிறுமி கூறியுள்ளார். பெற்றோர்கள் பொலிசில் புகார் அளிக்க Ablorhஐ தேடி வந்த பொலிசார் புத்தாண்டு அன்று Croydon பகுதியில் உள்ள தேவாலயத்தில் வைத்து அவரை அதி ரடியாக கைது செய்துள்ளனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Ablorhஐ சிறுமி அடையாளம் காட்டியதை அடுத்து குற்றவாளி என நிருபிக்கப்பட்ட Ablorhக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்